'கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?
தமிழகத்தை வாழ வைக்க இனி விஜயகாந்தை விட்டால் ஆளில்லை ,நாதியற்றுப் போன தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பவர் ஸ்டார் [அட நடிப்புல பவருங்கோ} விஜயகாந்த் என்று அவரை முதலமைச்சர் வேட்பாளராக்கி விட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியினர் .ஒரு சமூகத்தின் தலைவனாக வர விரும்புபவன் அந்த மண் சார்ந்தவனாகவும் மக்களில் ஒருவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவனாக ,அந்த மக்களின் நலன் நாடுபவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணின் மொழியையும் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும் .ஏனென்றால் ஒரு சமூகத்தை ,ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் ஆயுதம் ஏந்தத் தேவையில்லை ! அந்த இனத்தின் தாய் மொழியினை அழித்தாலே போதும் !அவர்கள் அடையாளாம் இழந்து அழிந்து போவார்கள் .ஏனென்றால் தாய் மொழி என்பது ஒரு இனத்தின் வாழ்வு நெறிகளின் ,பண்பாட்டின் ,கலாச்சாரத்தின் அடையாளம் !
எதற்கு இவ்வளவு பீடிகை என்று யோசிக்கிறீர்களா ?கிங் விஜயகாந்த் தெலுங்கர் என்றாலும் தமிழை நேசிப்பவர் என்ற ஒரு எண்ணம் இங்கு நிலவுகிறது .தமிழ் எனது மூச்சு தமிழ் எனது பேச்சு அதுவே எனது வாட்ச்சு என்று சினிமாவில் பூச்சாண்டி போல் கண்களை உருட்டிப் பேசியவராயிற்றே !
அது எவ்வளவு பெரிய பொய் ! சென்னையின் பிரபலமான கல்லூரியில் தமிழ்த் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ! தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்காக அடிப்படைத் தமிழ் வகுப்பு நடத்தப் படும் ,.பல்கலைக் கழக உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த வகுப்புக்களில் பங்கெடுத்து ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரியாக முடியும் .பெரும்பாலும் மணிப்பூர் ,நாகலாந்து ,ஆந்திரா ,கேரளா கல்கத்தா போன்ற மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் வந்து படிக்கும் மாணவர்கள் இதில் பங்கெடுப்பார்கள் ,
அ னா ஆவன்னா விலிருந்து தொடங்கி உயிர், மெய், உயிர்மெய் எழுத்து,எனத் தொடர்ந்து பிறகு அணில், ஆடு ,காய் கனிகள் என்று சொல்லிக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்குத் தாவு தீர்ந்து விடும் .ஒரே வகுப்பில் ஒரே நேரத்தில் 60 க்கும் மேற்பட்ட பலதுறை பயிலும் மாணவ மாணவியருக்குத் தனித் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் . பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கேரளாவிலிருந்து வந்து படிக்கும் மாணவ மாணவியரும் தேர்வுக்காக என்று இல்லாமல் ஆர்வத்துடனேயே கற்றுக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன்.
ஒரு நாள் அந்த வகுப்பில் கையில் பாடப் புத்தகமோ எழுதுவதற்கு நோட்டோ எதுவும் இல்லாமல் ஒரு மாணவன் முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டும் மற்றவர்களையும் எழுத விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் .அவனை அது வரையில் அந்த அடிப்படைத் தமிழ் வகுப்பில் நான் பார்த்ததேயில்லை . விசாரித்த போது பெயர் சண்முக பாண்டியன் என்பதும் அவன் கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை எனவும் தெரிந்தது .இனி தவறாது வகுப்புக்கு வருவதாகச் சொன்னவன் முந்தைய நாளைப் போலவே நோட்டுப் புத்தகம் எதுவும் இன்றி வந்து சள சளவென்று பேசிக் கொண்டிருந்தான் .அவனுடைய நோட்டு எங்கே எனக் கேட்டதும் பக்கத்திலிருந்தவனின் நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி தன்னுடையது என்று காட்டிச் சாதித்தான் .
அவனுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்டேன் .தனக்குத் தாய்மொழி தமிழ் இல்லை என்றான் .அப்படிப் பட்டவர்களுக்காகத் தான் இந்த வகுப்பு ,ஆப்பிரிக்க தேசத்து மாணவர்கள் கூட ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்றதும் "இதப் படிக்கலேன்னா என்ன பிரச்சினை "எனக் கேட்டான் .டிகிரி வாங்க முடியாது என்றேன் என்னால் கண்டிப்பாகத் தமிழ் படிக்க முடியாது .விதி விலக்கு வாங்க முடியுமா என்று கேட்டான் ஏதோ தோஷத்துக்குப் பரிகாரம் உண்டா என்பது போல !விதி விலக்கு உண்டு சில மாற்றுத் திறனாளிகள் குறிப்பாகப் பார்வையற்றோர் விலக்கு பெறமுடியும் என்பதைத் தெரிவித்தேன் .சரியான மூளை வளர்ச்சி இல்லாமல் படிக்க வரும் மாணவர்களுக்கும் மொழிப் பாடத்திலிருந்து பல்கலைக் கழகத்தால் விதி விலக்கு வழங்கப் படும் என விளக்கினேன் .பலத்த யோசனையுடன் சென்றான் .
மீண்டும் சில நாட்கள் அவனை வகுப்பில் காணவில்லை .விசாரித்த பொழுது "அவன் எப்பொழுதும் இப்படித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப் பெண்களுக்கும் குறைவா வாங்கியிருந்தான் .நல்லா படிக்கிற யாருக்காவது அந்த சீட் ஐக் கொடுத்திருந்தால் பிரயோஜனமாயிருந்திருக்கும் என்று மாணவர்கள் அலுத்துக் கொண்டார்கள் 1150 மதிப்பெண் பெற்ற படைப் பூக்கமும் ஆர்வமும் கொண்ட பல ஏழை மாணவர்களுக்கே அக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் இடம் கிடைக்காத போது இப்படிப் பட்ட மாணவனுக்கு எப்படிக் கிடைத்தது ?
நான் திகைத்துப் போய் நின்றிருக்க ,அவன் விஜயகாந்தின் மகன். .முதலில் அவனுக்கு சீட் தரமுடியாது என்றுதான் மறுக்கப் பட்டது .சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் மகனுக்கே இடம் தர முடியாதா? என்று விஜயகாந்த் நேரில் வந்து சண்டை போட்டு வாங்கினாராம் என்றார்கள் மாணவர்கள் .அரசல் புரசலாகக் கேள்விப் பட்டிருந்த விஷயம்தான் .ஆனால் அயர்ச்சியாக இருந்தது ,
நீண்ட இடைவெளிக்குப் பின் கிங் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் என்னை வகுப்பில் வந்து சந்தித்தான் .முகத்தில் விடுதலை உணர்வும் சந்தோஷமும் ஆர்ப்பரித்தன .கையில் வைத்திருந்த பேப்பரைக் கொடுத்தான் தான் மொழிப் பாடம் அதாவது அ ,ஆ என அடிப்படைத் தமிழ் கூடப் படிக்கத் தேவையில்லை என்று பல்கலைக் கழகத்திலிருந்து விலக்கு வாங்கி விட்டதாகக் கூறினான் ."எப்படி விலக்கு வாங்கினாய் ?உடலில் ஊனம் என்றா ??அல்லது மூளை வளர்ச்சி குன்றிய மாணவன்? என்றா என நான் அவனிடம் கேட்கவில்லை .கம்பீரமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பதற்கே அருவருப்பாக உணர்ந்தேன் .
அதே அருவருப்பான உணர்வினை கிங் விஜயகாந்த் தமிழக முதல்வருக்கான வேட்பாளர் என இடது சாரி காம்ரேட்டுகள் சொன்ன கணத்திலிருந்து உணர்கிறேன் .கிங் விஜகாந்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று தானே சொல்லித் திரிகிறார் .அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழ் மொழியே பிடிக்காது !அவர்களைப் பொறுத்த வரை தமிழ் தீண்டத் தகாத மொழி. எம் மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையும் வளமையும் கொண்ட மொழி !அமுதத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்கள் தமிழ் இனம் தொன்மையான நாகரிகமும் பண்பாடும் கொண்ட மாண்புயர் இனம் !
எங்கள் மொழியினை வெறுக்கும் ஒரு மனிதன் ,திரைப் பட நடிகன் {அதுவும் லாஜிக் எதுவும் இல்லாத மசாலாத்திரைப்படம்} என்பதைத் தவிர எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் எம் மண்ணையும் மக்களையும்
ஆளத் துடிப்பது எங்கனம்?எம் தமிழ் மொழியை வெறுப்பவர் எம் மண்ணில் வாழ்வதற்கே தகுதியற்றவர் .இதனை இடது சாரி அறிவு ஜீவிகள் உனராமலிருக்கலாம் .ஆனால் எம் மக்கள் ஏமாளிகள் இல்லை .அதனைத் தேர்தல் முடிவுகள் சொல்லும்

உங்களது தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குநமது தமிழ் மண் ,மக்கள் மற்றும் மொழிக்கு எதிரானவர்களை விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை .இந்த தமிழினத் துரோகிகளின் முகத் திரையைக் கிழிப்பதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது
பதிலளிநீக்குஉண்மை கருத்துக்கைளை உலகிற்கு வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.... தற்போது தமிழ்நாட்டில் தமிழ் என்பது ஏழைகளின் கல்வியாக மாறி விட்டது. தமிழை வளா்க்கின்றேன் என்ற பெயாில் தமிழை அளித்தவா்கள் தான் தமிழ் நாட்டில் உள்ளனா். தமிழ்நாட்டில் தாய் மொழியாம் தமிழை பயிலாமலேயே உயா் கல்வி வரை படிக்கும் நிலை தமிழ்நாட்டில் தான் உள்ளது. இப்போது அந்த நபா் தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறாா். ஏமாறுபவா்கள் இருக்கும் வரை இந்த உலகில் ஏமாற்றுபவா்கள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாா்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி .
பதிலளிநீக்கு