'தலித் எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை
கொடிய தீண்டாமையின் நெடிய வரலாறு பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர் போல பாரதீய
ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் அவர்கள் வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் #இமையம் அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது . வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் #இமையம் அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது.சாதீயம்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என சமூகப் பிரச்சினைகள் பற்றி தனது கலாபூர்வமான படைப்புக்களின் வழியாக நம்மிடம் தொடர்ந்து உரையாடி வரும் திரு #இமையம் சுருக்கமாகவும்செறிவாகவும் தனது மறுப்பினைப் பதிவு செய்துள்ளார்.தனது கருத்துக்கு அரணாக அயோத்தி தாஸ் பண்டிதரின் சிந்தனையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்
.சாதீயம் பற்றிய இல கணேசனின் கருத்துக்கு 'தலித் அறிவுஜீவிகளின் ' எதிர்வினை என்ற வாசகத்துடன் இமையம் அவர்களின் கருத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது .ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆணவக் கொலைகளாக அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சாதிக் கொடுமைகள் பற்றி எழுதுவது சிந்தனையாளர்கள் மற்றும் ,படைப்பாளிகளின் {அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் } கடமையாகிறது.அந்தக் கடமையைச் சரியாகச் செய்கிறார் என்பதற்காகவே எழுத்தாளர் #இமையம் அவர்களை 'தலித்எழுத்தாளர்' 'தலித்அறிவுஜீவி' என்று ஒரு வட்டத்துக்குள் அடையாளப் படுத்துவது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. சாதீயத்துக்கு எதிரான வெறும்'பரப்புரையாக' இல்லாமல் சிறந்த கலைப் படைப்புக்களாக நிலைத்து நிற்பவை அவரது நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும்!
தலித்துகள் பற்றி எழுதுவதனால் ஒருவரை தலித் எழுத்தாளர் என்று இங்கு அடையாளப் படுத்துவதில்லை.எழுதுபவர் தலித்இனத்தவர் என்றால் மட்டுமே இப்படி அடைமொழி கொடுத்து அழைக்கப் படுகிறார்.பெண்களின் உலகம் ,அவர்களின் வலி ,தாராளமயமாக்கலில் சந்தைப் படுத்தப் பட்டு விட்டகல்வி என்று பல விஷயங்களை எழுதி வரும் இமையம் அவர்கள் இந்த அடையாளங்களுக்குள் அடைபட வேண்டியவர் இல்லைஎன்பது என்னுடைய கருத்து.
ஒரு சந்தேகம் !
நமது சமூகத்தில் யாரேனும் 'நாடார் எழுத்தாளர்' 'பிள்ளைமார் எழுத்தாளர்' 'மீனவ எழுத்தாளர்' அல்லது 'பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்' அல்லது 'மிகவும்
பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்' என்று அடைமொழி கொடுத்து அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்களா?
தலித் மக்களின் வாழ்வையும் கண்ணீரையும் ,பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்டவர்களாக ,ஒதுக்கப் பட்டு வாழும் அந்த விளிம்பு நிலை மக்களின் அவலங்களையும் பதிவு செய்யும் ஒரு படைப்பாளி தலித் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை ,"தலித் எழுத்தாளர் என்று அழைப்பதும் தீண்டாமையே